Benedict Cumberbatch: அவஞ்சர்ஸ் 5ம் பாகத்தில் பெனெடிக்ட் நடிப்பது உறுதி: அவரே கூறிய தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பெயர்போன அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் ஐந்தாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் பெனடிக் தான் நடிப்பதையும் உறுதி செய்துள்ளார்.
ஜூன் 22, நியூயார்க் (New York): அமெரிக்காவின் பல சுவாரசியம் கொண்ட காமிக் கதைகளில், அவெஞ்சர்ஸ் உலகளவில் புகழ்பெற்றது. இந்த காமிக் கதாபாத்திரங்களை வைத்து உருவான அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கு என உலகளவில் ரசிகர்கள் உண்டு. இதனால் அவெஞ்சர்ஸ் படம் சர்வதேச அளவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வரை இதன் 4 பாகங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படத்தின் ஐந்தாம் பாகம் எடுக்கப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Fish Eating Snakes: மீன்களை பிடித்து ருசித்து சாப்பிடும் பாம்புகள்; அருவியில் நடந்த ஆச்சரியம்.. வைரல் வீடியோ உள்ளே.!
அவெஞ்சர்ஸ் 5:
கடந்த 2019ம் ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் புல்லரிக்கவைக்கும் காட்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் படம் நிறைவானது. இதனைத்தொடர்ந்து, மார்வெல் ஸ்டுடியோஸ், வால்ட் டிஸ்னி தயாரிப்பில் உருவாகும் படத்தின் ஐந்தாம் பாகம் 2025 க்குள் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நெட்பிளிக்ட்ஸில் நடிகர் பெனெடிக்ட் கும்பேர்பேட்ச் (Benedict Cumberbatch) அளித்த சிறப்பு பேட்டியில், அவர் அவெஞ்சர்ஸ் படத்தின் 5ம் பாகத்தில் நடிப்பதை உறுதி செய்து இருக்கிறார். இந்த காணொளி வெளியாகி வைரலாகவே, பெனெடிக்ட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னோட்ட வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 22, 2024 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

