Kanchipuram College Girl Gang abused: கல்லூரி மாணவி காதலன் கண்முன் 5 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு..!

ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் காதலரை நேரில் சந்தித்த கல்லூரி மாணவியை ஐவர் கும்பல் கூட்டாக சேர்ந்து காதலனின் கண்முன் இருவரின் கழுத்திலும் பட்டா கத்தி வைத்து, கல்லூரி மாணவியிடம் 5 பேராக அத்துமீறி தப்பி சென்ற துயரம் நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Kanchipuram College Girl Gang abused: கல்லூரி மாணவி காதலன் கண்முன் 5 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு..!
Manikandan - Sivakumar - Vimal - Vignesh - Thennarasu ((Kanchipuram Gang Rape Accuse))

ஜனவரி 14, குண்டுகுளம்: அன்பு மிகுந்த காதலனை தனிமையில் சந்திக்க சென்ற பெண்ணுக்கு ஐவர் கும்பலால் நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள சிவிலிமேடு (Sevilimedu, Kanchipuram), குண்டுகுளம் பகுதியில் ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில், நேற்று முன்தினம் கல்லூரி மாணவி மற்றும் அவரின் இளம் காதலர் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இதனைகவனித்த அப்பகுதி இளைஞர்கள் 5 பேர், காதல் ஜோடியிடம் தகராறு செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, தங்களின் கையில் எடுத்து சென்ற பட்டா கத்தியை காதல் ஜோடியின் கழுத்தில் தனித்தனியே வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர், ஐவரும் சேர்ந்து பெண்ணை (College Girl Abused by 5 Man Gang) தனித்தனியே என கூட்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

Template: Girl Feels Sad

இந்த துயரத்தை விடியோவாக எடுத்து வைத்த கயவர்கள், காதல் ஜோடியிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை புரிந்துகொண்டனர். அவர்கள் வந்த வாகனத்தையும் பிடுங்கி அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Online Gaming Excellence Center: ஆன்லைன் விளையாட்டுகளுக்காக சிறப்பு தொழில்நுட்ப மையம் – மத்திய இணை அமைச்சர் உறுதி..! 

புகாரை ஏற்ற காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், குண்டுகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், விமல், தென்னரசு, சிவகுமார், விக்னேஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கல்லூரி மாணவர்களான காதல் ஜோடியிடம் அத்துமீறியது உறுதியானது.

இவர்களின் மீது கொலை முயற்சி, கற்பழிப்பு உட்பட 3 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்த நிலையில், கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்படும் போது தப்பி செல்லும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, காவல் துறையினர் துரத்தி சென்று அனைவரையும் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது ஐவரும் விழுந்து வாரிக்கொண்டதில் மணிகண்டன் மற்றும் தென்னரசு ஆகியோருக்கு கை-கால் எலும்பு முறிவு, ஒருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இவர்களை மனிதாபிமானத்துடன் மீட்ட காவல் துறையினர், அனைவரையும் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 14, 2023 02:23 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 14, 2023 02:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).