மார்ச் 23, ஆட்சியர் அலுவலகம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை கிராமத்தில் இருக்கும் பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிப்பின் போது பயங்கர (Kanchipuram Fire Accident) வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை மற்றும் குடோன் வெடித்து சிதறி, 9 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 19 பேர் படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 இலட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 இலட்சம் நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ரூ.2 இலட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடோன்கள், பட்டாசு தயாரிப்பு ஆலை மறுஉத்தரவு வரும் வரையில் செயல்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். IndiGO Complaint: மதுபோதையில் விமான பணியாளர்களுடன் தகராறு; 2 பயணிகள் மீது வழக்குப்பதிவு.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு.!
மறுஉத்தரவு வரும் வரையில் காஞ்சிபுரத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பு, குடோன் பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு..
நேற்று குருவிமலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அறிவிப்பு..#Kanchipuram | #FireAccident pic.twitter.com/9ryAUAKHmj
— Sriramrpckanna (@Sriramrpckanna1) March 23, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)