மார்ச் 10, அருமனை (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை (Arumanai, Kanyakumari), மேல் வெங்கணாங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் கலா (வயது 40). இவர் கணவரை (Widow Women Live With Children) இழந்து தனது குழந்தைகளோடு வசித்து வருகிறார்.
குடும்பத்தின் வறுமையால் கலா தனக்கு கிடைத்த வேலைகளை செய்து பிழைத்த வந்துள்ளார். இவர் அங்குள்ள மேல்புறம் பகுதிக்கு சென்றுவம்போது, அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களின் (Auto Rickshaw Drivers Hurt Women Abusing Speech) சிலர் கலாவை ஆபாசமாக பேசி கேலி செய்துள்ளனர்.
இந்த செயல் நீண்டகாலமாக தொடர்ந்து வந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனருக்கு - கலாவுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் நடந்துள்ளது. இதற்கிடையே, நேற்று காலை கலா வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க ஆட்டோ ஸ்டாண்ட் வழியே சென்றுள்ளார்.
அப்போது, ஓட்டுனர்கள் கலாவை இடைமறித்து தகராறு செய்து ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டாக சேர்ந்து கலாவை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். BSF Arrest Pakistani: எல்லைதாண்டி வந்த பாகிஸ்தானியை கைது செய்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள்.. தொடரும் தீவிர விசாரணை.!
கலா கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்து அருமனை காவல் (Arumanai Police) துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கலாவை மீட்டு, அவரிடம் இருந்து புகாரை பெற்றுக்கொண்டனர்.
புகாரை பெற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி பாகோடு பகுதியை சேர்ந்த சசி (வயது 45), விஜயகாந்த் (வயது 37), வினோத் (வயது 44) ஆகியோரை பெண் வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.