Kanyakumari Shocker: 16 வயது சிறுமியுடன் குடித்தனம் நடத்திய 19 வயது இளைஞர்; இன்ஸ்டா காதலால், இன்ஸ்டன்ட் போக்ஸோ..!

இன்ஸ்டாகிராம் காதலை நம்பி 16 வயதில் 19 வயது நபருடன் ஓட்டம்பிடித்த நிலையில், போக்ஸோ சட்டத்தில் காதலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Kanyakumari Shocker: 16 வயது சிறுமியுடன் குடித்தனம் நடத்திய 19 வயது இளைஞர்; இன்ஸ்டா காதலால், இன்ஸ்டன்ட் போக்ஸோ..!
Accuse Abhisek / Love File Picture Pic (Photo Credit: Facebook / Pixabay)

மார்ச் 02, குளச்சல் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நந்தன்விளை பகுதியை சேர்ந்த இளைஞர் அபிஷேக் (வயது 19). இவர் இன்ஸ்டாகிராம் செயலியை உபயோகம் செய்து வந்துள்ளார். அப்போது, அங்குள்ள குளச்சல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

சிறுமி மாயம்: சிறுமியிடம் முதலில் நட்பாக பேசி வந்த அபிஷேக், பின்னாளில் அவரை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். தையல் வகுப்புக்கு சென்று வந்த சிறுமியை, அவ்வப்போது நேரிலும் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி தையல் பயிற்சிக்கு சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. Cockroach From Man’s Lungs: மனிதனின் நுரையீரலில் கரப்பான் பூச்சி.. வெற்றிகரமாக நீக்கிய மருத்துவர்கள்..! 

காதல் பெயரில் குடித்தனம்: இதனால் பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணையில், சிறுமியிடம் அபிஷேக் பழகி வந்தது தெரியவந்தது. இவர்களின் இருப்பிடத்தை அறிந்த காவல் துறையினர், ஓசூர் சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.

போக்ஸோவில் கைது: அவருடன் இருந்த சிறுமியை மீட்டு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு நடந்த விசாரணையில் சிறுமி காதல் வயப்பட்டதும், அதன்பேரில் அவரை ஆசைவார்த்தை கூறி ஓசூருக்கு அழைத்துச்சென்று குடித்தனம் நடத்தியதும் உறுதியானது. இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த அதிகாரிகள், அபிஷேக்கை கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Mar 02, 2024 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).