Krishnagiri FireWorks Accident: நொடியில் நடந்த பயங்கரம்; பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து.. 8 பேர் பலி, 15 பேர் படுகாயம்.!

பழையபேட்டை பகுதியில் செயல்படும் பட்டாசு குடோனில் நடந்த பயங்கர விபத்தில் 8 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Krishnagiri Firecrackers Storage Fire Accident (Photo Credit: YouTube)

ஜூலை 29, பழையபேட்டை (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு குடோன் வெடித்த விபத்தில், அதன் அருகேயிருந்த 3 குடியிருப்புகளும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டன.

இந்த விபத்தில் குடோனில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக தற்போது வரை உயிரிழந்துள்ளனர். 15-க்கும் அதிகமான நபர்கள் படுகாயம் அடைந்தனர். Gun Shot US: பொதுஇடத்தில் சரமாரி துப்பாக்கிசூடு; 4 பேர் படுகாயம்.. அமெரிக்காவில் தொடரும் சோகம்.! 

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடுவோர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்திற்கான முதற்கட்ட விசாரணையில், குடோன் அருகே செயல்பட்டு வரும் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பின் பட்டாசு குடோனில் வெடிப்பு நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement