திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து படுகொலை.. தமிழகமே அதிர்ச்சி.!

திருப்பூரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ சண்முகவேல் (SSI Shanmugavel Murder)என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து படுகொலை.. தமிழகமே அதிர்ச்சி.!
Tiruppur SSI Murder Case (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 06, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் மகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சண்முகவேல் (வயது 52). இவர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிக்கு வலை வீச்சு :

இந்த விஷயம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உயிரிழந்த எஸ்.ஐ சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளிகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டதாக காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்துள்ளது. இதன் பெயரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Breaking: காவல் உதவி ஆய்வாளர் படுகொலை.. ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதல்வர்.! 

காவல் உதவி ஆய்வாளர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை :

இதனை அடுத்து அவரும், ஒரு காவலரும் நிகழ்வு இடத்திற்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது தகராறு விஷயத்தில் தொடர்புடைய இருவரையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டுள்ளது. சமாதானத்திற்கு பின் அவர்கள் கலைந்து சென்ற நிலையில், அதிகாரியும் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். அப்போது திடீரென காவல் உதவி ஆய்வாளர் மீது ஒருவர் பயங்கரமாக தாக்குதல் நடத்தவே, தலை துண்டிக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளார்.

குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதல்வர் :

இந்த சம்பவத்தில் நிகழ்வு இடத்திலேயே அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர், போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டு விரைவில் குற்றவாளிகளை கைது செய்யவும் உத்தரவிட்டார். மேலும்  உடுமலைப்பேட்டை அருகே கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 15, 3860 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).