Gold Rate Today: தங்கம் வாங்க சரியான நேரம்.. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு.!

ரூ.64000 ஐ கடந்து சென்ற தங்கத்தின் விலை, இன்று ரூ.960 குறைந்து மீண்டும் 63 ஆயிரத்திற்கு வந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைத்தோர், இன்று வாங்கிக்கொள்வது நல்லது.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 12, சென்னை (Chennai News): தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, உலகளாவிய போர் பதற்றங்கள் உட்பட பல்வேறு காரணத்தால் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கம் தொடர்ந்து மக்களால் அதிகம் வாங்கப்படுகிறது. கடந்த சில வாரம் வரை ரூ.55,000 என இருந்த சவரன் தங்கம் விலை, தற்போது ரூ.64,000-ஐ கடந்து சென்று விட்டது. இன்னும் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்திற்கே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைக்கு பளார் விட்ட டிஎஸ்பி.. அடிக்கப்பாய்ந்த கூட்டம்.. சிறுவாபுரி முருகன் கோவிலில் பதற்றம்.! 

சென்னையில் இன்று தங்கம் விலை (Chennai Gold Rate Today):

கடந்த வாரத்தில் ரூ.62 ஆயிரத்தை கடந்து பலரும் அதிர்ச்சி கொடுத்த தங்கம், தற்போது ரூ.64,000 ஐ கடந்து உள்ளது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64,480 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் தங்கத்தின் விலை ரூ.8,060 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை (Today Silver Price in Chennai) கிலோவுக்கு ரூ.1,07,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து, இன்று சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.63,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, இன்று கிராம் தங்கத்தின் விலை ரூ.7,940 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement