Siruvapuri Murugan Temple DSP Vs Transgenders Clash (Photo Credit: YouTube)

பிப்ரவரி 11, சிறுவாபுரி (Tiruvallur News): திருவள்ளூர் (Thiruvallur) மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை (Uthukottai), சிறுவாபுரியில் (Siruvapuri), புகழ்பெற்ற முருகன் கோவில் (Siruvapuri Murugan Temple) இருக்கிறது. ஒவ்வொரு செவ்வாயும் சிறுவாபுரி முருகன் கோவில் அதிக பக்தர்களை எதிர்கொள்ளும். அந்த வகையில், 11 பிப்ரவரி 2025 இன்று செவ்வாய்கிழமையுடன், தைப்பூசம் (Thaipusam 2025) என்பதால், திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துகொண்டு இருந்தனர். இதனால் பக்தர்களின் நலன் கருதி காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 3 கிமீ தூரம், 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வானிலை: வாட்டி எடுக்கபோகும் வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

திருநங்கைகள் (Transgenders) யாசகம் பெற்றனர்:

கோயில்கள் உட்பட பொதுஇடங்களில், மக்கள் கூட்டத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் திருநங்கைகள், சிறுவாபுரி பகுதிக்கும் வந்து இருக்கின்றனர். அவர்கள் சாலையில் செல்வோர், வருவோரை நிறுத்தி யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த நிலையில், மக்கள் கூட்டம் அங்கு அதிகம் கூடியது. இதனால் பொதுமக்களும் சிரமத்தை எதிர்கொண்டனர். நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அறிவுறுத்தியும் பலனில்லை. Vadapalani Murugan Temple: அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்.. மணிக்கணக்கில் வடபழனி முருகனை நோக்கி காத்திருக்கும் பக்தர்கள்.! 

டிஎஸ்பி பளார்:

நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் ஊத்துக்கோட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி (Uthukottai DSP Shanthi) - திருநங்கைகள் இடையே இதுதொடர்பான வாக்குவாதம், தள்ளுமுள்ளு எழுந்தது. அப்போது, ஆத்திரமடைந்த டிஎஸ்பி சாந்தி திருநங்கையை கன்னத்தில் பளாரென அறைந்தார். இதனால் அவரை திருநங்கைகள் அடிக்கப்பாயவே, நிகழ்விடத்தில் கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அங்கு லேசான பதற்ற சூழ்நிலை உண்டாகியது. தற்போது பக்தர்கள் அனைவரும் இயல்பாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.