Gold Price Today: தங்கம் விலை புதிய உச்சக்கட்டம்.. சவரன் ரூ.64,480.. கிடுகிடு உயர்வால், பதறும் நகைப்பிரியர்கள்.!
சவரன் ஆபரண தங்கத்தின் விலை தொடந்து உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. indrum தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 என்ற அளவு உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை ரூ.64,000 ஐ கடந்து விற்பனை ஆகி வருகிறது.
பிப்ரவரி 11, சென்னை (Chennai News): உலகளவில் தங்கத்தின் மீதான நுகர்வு, போர்ப்பதற்றம், தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த சில வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.64,000-ஐ கடந்து சென்று விட்டது. Vadalur Jothi Dharisanam: ஜோதியாக காட்சி தந்த வள்ளலார்; பயபக்தியுடன் தரிசனம் செய்த பக்தர்கள்.. வடலூர் தைப்பூசம் 2025.!
சென்னையில் இன்றைய தங்கம் விலை (Today Gold Rate in Chennai):
கடந்த வாரத்தில் ரூ.62 ஆயிரத்தை கடந்து பலரும் அதிர்ச்சி கொடுத்த தங்கம், தற்போது ரூ.64,000 ஐ கடந்து உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, இன்று சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.64,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து, இன்று கிராம் தங்கத்தின் விலை ரூ.8,060 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை (Today Silver Price in Chennai) கிலோவுக்கு ரூ.1,07,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.