
பிப்ரவரி 11, வடலூர் (Cuddalore News): முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் பெற்றோர் சிவன் - பார்வதியிடம் கோபித்துக்கொண்டு குடிகொண்ட நாள் தைப்பூசத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா (Thaipusam Festival 2025) 11 பிப்ரவரி 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொண்டாட்டத்துடன் களைகட்டி வருகிறது. முருக பக்தர்கள் பலரும் 48 நாட்கள் விரதம் இருந்து காவடி எடுத்து பழனி, திருச்செந்தூர் உட்பட பல கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். Thaipusam 2025: தைப்பூசம் 2025: பழனியில் குவியும் பக்தர்கள்.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
பக்தர்களுக்கு காட்சி தந்த வள்ளலார்:
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் வடலூர் இராமலிங்க வள்ளலார் (Ramalinga Swamigal) திருக்கோவிலில், தைப்பூச திருவிழா நடைபெற்றது. அருட்பெருஞ்சோதி (Vadalur Vallalar Jothi Dharisanam) வடிவில் ஐயா வள்ளலார் இன்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருட்பெருஞ்ஜோதியே வாழ்க! என்ற முழக்கத்துடன் வள்ளலாரை பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தனர். வடலூர் சத்திய ஞான சபையின் (VADALUR SATHYAGNANA SABAI) 154 வது தைப்பூச திருவிழாவில், கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொம்மை, வெண்மை, கலப்பு திரைகள் நீக்கப்பட்டு, காலை 6 மணியளவில் வல்லார் அருட்பெருஞ்ஜோதியாக காட்சி தந்தார்.
வடலூர் தைப்பூசம் 2025 ஐ முன்னிட்டு, இன்று போக்குவரத்துமாற்றம் தொடர்பான அறிவிப்பு:
⚡வடலூர் தைப்பூசம் அன்று போக்குவரத்து மாற்றம் செய்யபடவுள்ளது. pic.twitter.com/ygVzwnUeem
— Cuddalore Flash News (@cudflashnews) February 10, 2025
ஏழு வண்ண திரைகள் விலக காட்சி தந்த ஐயா வள்ளலார்:
#JUSTIN வடலூர் சத்தியஞான சபையில் 154-ஆவது தைப்பூச ஜோதி தரிசன விழா
தைப்பூசத்தையொட்டி ஏழு வண்ண திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்#Vadalur #Cuddalore #SathyagnanaSabai #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/2pOtWlknpB
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 11, 2025
வடலூர் ஜோதி நேரலை (Vadalur Vallalar Temple Jyothi Live):
வீடியோ நன்றி: ஜோதி டிவி