வானிலை: காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.!
இன்று (ஆகஸ்ட் 13) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 13, நுங்கம்பாக்கம் (Chennai News): மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும். அடுத்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
இதன் காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை: 7 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
சென்னை வானிலை (Chennai Weather) :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Aug 13, 2025 09:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

