ஜனவரி 15, அவனியாபுரம்: மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் (Avaniyapuram Jallikattu 2023 Pongal Festival, Madurai) உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஜனவரி 15ம் தேதியான இன்று நடைபெற்றது. காலை 07:30 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியானது, மாலை 5 மணிவரையிலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. 737 காளைகள் முறையான அனுமதி பெற்று திறந்து விடப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், காளையை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த போட்டியின் போது 28 காளைகளை அடக்கி வெற்றிபெற்ற ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த விஜய்க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் சார்பில் முதல் பரிசான கார் வழங்கப்பட்டது. இவர் கேங்மேனாக வேலை பார்க்கிறார். 50 Girls Abused: காதலர்களுடன் நள்ளிரவில் சுற்றும் பெண்கள் டார்கெட்.. போலீஸ் அதிகாரியாக நடித்து 50 பெண்களை சீரழித்த காமக்கொடூரர்கள் சுட்டுப்பிடிப்பு.. ADSP வெள்ளத்துரை அதிரடி.!
அதனைத்தொடர்ந்து, அவனியாபுரம் பகுதியில் வசித்து வரும் கார்த்திக் 17 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசையும், விளாங்குடியை சேர்ந்த பாலாஜி 14 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
காமேஷின் காளை முதல் பரிசையும், வில்லாபுரத்தை சேர்ந்த கார்த்திக்கின் காளை இரண்டாம் பரிசையும், அவனியாபுரம் முருகனின் காளை மூன்றாம் பரிசையும் பெற்றன. காளைகளின் பரிசு அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.