Madurai Shocker: சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு; சகோதரி, அவரின் காதலர் கொடூர கொலை.. இளைஞரின் சாதி வெறியால் அதிர்ச்சி..!
வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் கொண்ட பெண்ணுக்கு அவசர திருமணம் செய்து, அவர் கணவரிடம் இருந்து பிரிந்து வந்து காதலை தொடர்ந்ததால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 01, திருமங்கலம் (Madurai News): மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், கூடக்கோவில் சரகம், கொம்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இதே கிராமத்தைச் சார்ந்த இளம்பெண் மகாலட்சுமி. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில், இருவரும் காதல் வயப்பட்டு இருக்கின்றனர். உயிருக்கு உயிராக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஜாதி மறுப்பு காதலுக்கு பெண் தரப்பு எதிர்ப்பு: இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவரவே, அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவசர அவசரமாக தங்களின் மகளுக்கு மணமகன் பார்த்து, தங்களது சமூகத்தை சார்ந்த ஒருவருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணமான ஒரே வாரத்தில் கணவருடன் சண்டையிட்ட மகாலட்சுமி, மீண்டும் தனது தாயாரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். மேலும், அங்கிருந்தவாறு தனது காதலர் சதீஷ்குமாருடன் செல்போனில் பேசி, காதலை வளர்த்து வந்துள்ளார். இந்த விஷயம் மகாலட்சுமியின் சகோதரர் பிரவீன்குமாருக்கு தெரிய வரவே, அவர் காதல் ஜோடியான தனது சகோதரி மகாலட்சுமி மற்றும் சதீஷ் குமார் ஆகிய இருவரையும் கடுமையாக கண்டித்திருக்கிறார்.

திருமணம் ஆகியும் காதலில் உறுதி: இதனை கண்டுகொள்ளாத காதல் ஜோடி, தொடர்ந்து காதலில் உறுதியாக இருந்ததாக தெரியவருகிறது. இதனால் தனது அக்கா மற்றும் அவரை காதலிக்கும் நபரை கொலை செய்ய திட்டமிட்ட பிரவீன் குமார், சம்பவத்தன்று இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய சதீஷ்குமாரை வழியில் இடைமறித்துள்ளார். சற்றும் எதிர்பாராத நேரத்தில் சதீஷ் கண்களில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் சரமாரியாக வெட்டி தலையை துண்டித்து இருக்கிறார். IMD- Monsoon 2024 Prediction: இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?. இந்திய வானிலை மையம் தகவல்..!
பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி செயல்: துண்டிக்கப்பட்ட தலையுடன் தங்களது ஊரில் உள்ள நாடக மேடைக்கு சென்றவர், அங்கு தலையை வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பிரவீன், தனது சகோதரியின் வாய் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மகனின் செயல்பாடுகளை கண்டு, அவரை தடுக்க முயன்ற தாய் பிடாரியின் கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து பிடாரியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் விசாரணை: மேலும், கொலை செய்யப்பட்ட மகாலட்சுமி மற்றும் சதீஷ்குமார் ஆகியோரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கூடக்கோவில் காவல்துறையினர், 2 தனிப்படை அமைத்து பிரவீன் குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Feb 01, 2024 08:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

