Remembering Vijayakanth: விஜயகாந்த் மறைவு... ரசிகர்கள் மொட்டையடித்து இரங்கல்!!

விஜயகாந்த் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் மொட்டையடித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Remembering Vijayakanth: விஜயகாந்த் மறைவு... ரசிகர்கள் மொட்டையடித்து இரங்கல்!!
Vijayakanth Fans (Photo Credit: @backiya28 X)

டிசம்பர் 28, மதுரை (Madurai): தேமுதிக தலைவர் விஜயகாந்த் (வயது71) கொரோனா மற்றும் நுரையீரல் அழற்சி காரணமாக காலமானார். இதையடுத்து அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து காவலர்கள் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கேப்டன் விஜயகாந்த் உடல் வைக்கபட்டுள்ளது. IMD Weather Update: தமிழகத்திற்கு மழை வாய்ப்பு... இந்திய வானிலை மையம் அறிக்கை..!

ரசிகர்கள் மொட்டையடித்து இரங்கல்: இந்நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மதுரை அவனியாபுரத்தில் அவரது தீவிர ரசிகர்கள் மொட்டையடித்து அவருக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தியுள்ளனர். முன்னதாக அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள், பின்னர் மொட்டையடித்து தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

(The above story first appeared on LatestLY on Dec 28, 2023 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).