My TVK App: தவெக-வில் உறுப்பினராவது எப்படி?.. தவெக வெப்சைட் மூலம் இணைய முழு விபரம் இதோ.!

சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் ஓடிபி இல்லாமல் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் My TVK செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தித்தொகுப்பில் மை டிவிகே ஆப்பை டவுன்லோடு செய்து எப்படி உறுப்பினர் ஆகலாம் என விரிவாக காணலாம்.

My TVK App is Live Now (Photo Credit : @ActorVijayFP X / Youtube)

ஜூலை 30, சென்னை (Chennai News): 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்களுக்கு புதிய ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே கட்சி நிர்வாகிகள் நியமனம் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

My TVK செயலியை அறிமுகம் செய்தார் தவெக விஜய் :

மை டிவிகே(My TVK) என்ற புதிய செயலியை அவர் அறிமுகம் செய்து வைத்துள்ள நிலையில், அந்த செயலியில் ஓடிபி இல்லாமல் உறுப்பினர்களை சேர்க்கும் முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பனையூர் அலுவலகத்தில் நடந்த விழாவில் உறுப்பினர் சேர்க்கையையும் அவர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 5 உறுப்பினர்களுக்கு அவர் தனது அடையாள அட்டையையும் வழங்கி இருந்தார். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே செல்போன் எண்ணை பதிவு செய்து அதிகபட்சமாக ஐந்து உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Gold Rate Today: தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. உச்சக்கட்டத்தில் வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.! 

வெற்றி பேரணியில் தமிழ்நாடு :

மேலும் "வெற்றி பேரணியில் தமிழ்நாடு" என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பொருட்டு நிர்வாகிகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கட்சியின் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதனை தொடர்ந்து பொதுமக்களும் கட்சியில் இணைந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்தப்பட்டுள்ளன.

தவெக குடும்பம் இணைவது எப்படி (How To Join TVK Family)?

  • TVK Family Join Link : https://www.tvk.family/
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள TVK Family என்ற லிங்கை கிளிக் செய்தபின் தவெகவின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லும்.
  • இணையதள பக்கத்தில், "வணக்கம் தோழரே...!! தமிழக வெற்றிக் கழகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.. உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள உங்களுடைய 10 இலக்க மொபைல் எண்ணை அனுப்பவும்" என்ற வாசகம் இருக்கும்.
  • வாட்ஸ்அப்-ல் மெசேஜ் செய்வது போல தங்களது 10 இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
  • இதன் பின் OTP எண்ணை டைப் செய்து அனுப்பவும் என்று கேட்கும்.
  • ஒருவேளை மொபைல் எண்ணை தவறாக உள்ளீடு செய்திருந்தால் அதனை OTP எண்ணை டைப் செய்வதற்கு முன்னர் "மொபைல் எண்ணை மாற்றுக" என்பதை கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம்.
  • தங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை பிழையின்றி கொடுத்து உள்நுழைந்து நீங்களும் தவெக தலைவர் விஜய்யுடன் சேர்ந்து பயணிக்கலாம்.
  • MY TVK Appஐ பதிவிறக்க : https://play.google.com/store/apps/details?id=family.tvk.mytvk&pli=1

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement