Snake Bite Death: கண்ணடி வீரியன் பாம்பை பிடித்து வித்தை காண்பித்தவர் பாம்பு கடிபட்டு மரணம்.! மதுபோதையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்..!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் இருந்தவர் கண்ணாடி வீரியன் பாம்பை எடுத்து விளையாடி பரிதாபமாக பலியாகினார்.
ஜனவரி 1, திரிப்பாதிரிபுலியூர்: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் (Man Died Snake Byte) இருந்தவர் கண்ணாடி வீரியன் பாம்பை எடுத்து விளையாடி பரிதாபமாக பலியாகினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர், சுப்புராயன் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் நேற்று முன்தினம் இரவில் புத்தாண்டை கொண்டாட நண்பர்களுடன் சேர்ந்து மூக்கு முட்ட மதுபானம் அருந்தியுள்ளார்.
இரவு நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த மணிகண்டன், அவ்வழியே நள்ளிரவு நேரத்தில் சென்ற பாம்பை பிடித்து கையில் தூக்கி விளையாடி இருக்கிறார். Husband Murder: கள்ளகாதலுக்காக கணவரை பலிகொடுத்த பெண்.. மது ஊற்றி கொன்று தூக்கிய பரிதாபம்.. தவிக்கும் 2 பெண் குழந்தைகள்.!
இதனால் ஆத்திரமடைந்த பாம்பு மணிகண்டனை கடித்துவிடவே, அவர் அங்கிருந்தோரிடம் பாம்பை காட்டி புத்தாண்டு பரிசு என்று கூறியவாறு மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாம்பை பொதுமக்கள் அடித்தபின்னர்தான், மணிகண்டன் கையில் வைத்து விளையாடியது கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி வீரியன் பாம்பு என்பது உறுதியானது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 2, 2023 03:23 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

