NEET Suicide: நீட் மாதிரி தேர்வில் தோல்வி; நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த ஊழியரின் மகள் தற்கொலை..! இரயில் தண்டவாளத்தில் தலைவைத்து சோகம்.!

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ - மாணவியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்ளும் சோகம் தமிழகமெங்கும் தொடர்ந்து வருகிறது.

NEET Suicide: நீட் மாதிரி தேர்வில் தோல்வி; நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த ஊழியரின் மகள் தற்கொலை..! இரயில் தண்டவாளத்தில் தலைவைத்து சோகம்.!
Girl Nisha Suicide Railway Track (Visuals from Spot)

ஏப்ரல் 06, வடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி (Neyveli, Cuddalore) என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவரின் மகள் நிஷா. இவர் மருத்துவ படிப்பில் சேருவதற்கு விரும்பியுள்ளார். அதற்காக நீட் தேர்வு எழுதவும் தயாராகி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் கலந்துகொண்ட நிஷா தோல்வியடைந்த நிலையில், மீண்டும் நீட் எழுத படித்து வந்துள்ளார். தனியார் பயிற்சி மையத்திலும் இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் நீட் தேர்வுக்கு அவர் தயாராகிக்கொண்டு இருந்த நிலையில், பயிற்சி மையத்தில் மாதிரி தேர்வு எழுதியுள்ளார். Narayan Rane: “என்னை கொலை செய்ய கூலிப்படை ஏவப்பட்டது” – மத்திய அமைச்சர் உத்தவ் தாக்கரே மீது பரபரப்பு குற்றசாட்டு.!

அந்த தேர்விலும் அவர் தோல்வியடைந்ததாக தெரியவருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்த நிஷா, இன்று இரயில் தண்டவாளத்தில் தலைவைத்து பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி பயணித்த இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் தற்கொலை குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 06, 2023 05:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).