Scam Alert: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி.. ஆசிரியர் தம்பதி அதிரடி கைது..!
கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
நவம்பர் 25, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எலவனாசூர்கோட்டை கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர், நெடுமானூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயா, எலவனாசூர்கோட்டை கடை வீதியில் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். Reporter Dies: 33 வயதில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்.. தந்தையை இழந்து தவித்தவர், உடல்நலக்குறைவால் மரணம்.!
இந்நிலையில், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். அதன் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.50 லட்சம் வசூல் (Money Fraud) செய்துள்ளனர். ஆனால், பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் (நவம்பர் 23) அரசுப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் மற்றும் அவரது மனைவி ஜெயா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட தீவிர விசாரணையில், பொதுமக்களிடம் வசூலித்த ரூ. 50 லட்சத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Nov 25, 2024 06:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

