Schoolgirl Pregnant: பள்ளி மாணவி கர்ப்பம்.. காதலன் பேர் சொல்ல மறுத்ததால் பரபரப்பு..!

கடலூரில் பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவத்தில், காதலன் பெயரை சொல்ல மறுப்பதால் அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Schoolgirl Pregnant: பள்ளி மாணவி கர்ப்பம்.. காதலன் பேர் சொல்ல மறுத்ததால் பரபரப்பு..!
Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 10, சிதம்பரம் (Cuddalore News): கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், பள்ளிக்கு செல்லும்போது சிறுமியுடன் வாலிபர் ஒருவர் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும், சிறுமியிடம் அந்த வாலிபர் ஆசை வார்த்தைக் கூறி சிதம்பரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். இந்நிலையில், சிறுமி வீட்டில் இருந்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். TN Weather Update: மிதமான மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில், சிறுமி 2 மாத கர்ப்பிணியாக (Pregnant) இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் மகளிர் காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, காதலன் பெயரை சொல்ல சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், அடையாளம் தெரியாத அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).