Job Alert: மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்; உடனே பகிருங்கள்.. விபரம் உள்ளே.!
திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உட்பட 7 மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமையான நாளை நடைபெறுகிறது.
அக்டோபர் 08, பசுமலை (Madurai News): தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமானது நடைபெறுகிறது. அக்டோபர் ஒன்பதாம் தேதியான நாளை புதன்கிழமை (09.10.2024), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பங்கு பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. Kalaignar Centennial Park: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இவ்வுளவு வசதிகளா?.. அசத்தல் தகவல், பார்வைக் கட்டண விபரம் இதோ.!
7 மாவட்ட மாற்றுத்திறன் இளைஞர்களுக்கு அழைப்பு:
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, அரசின் பங்களிப்புடன் நடைபெறும் இந்த மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம், மதுரை நகரில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரியில் (The American College, Madurai) நடைபெறுகிறது.
தேவையான ஆவணங்கள்:
இந்த முகாமுக்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை (UUID), ஆதார் அட்டை, கல்விச்சான்று & நகல்கள், மார்பளவு புகைப்படம், முன்பே பணியாற்றி இருந்தால் அது சார்ந்த அனுபவச்சான்றிதழ், சுயவிபரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் வந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 08, 2024 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

