Love Gang Rape: 16 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து, 2 நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்; நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
மிஸ்ட்டு கால் பழக்கத்தில் அறிமுகமான 32 வயது நபர், 16 வயது சிறுமியை காதலில் விழவைத்து பெங்களூருக்கு அழைத்து சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம் நடந்துள்ளது. வறுமைக்காக வேலைக்கு சென்ற சிறுமிக்கு நடந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மே 07, விராலிமலை (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையை அடுத்துள்ள கிராமத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி, திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஊதுபத்தி தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிறுமி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர், மீண்டும் இரவு வெகுநேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராத நிலையில், மகளின் நிலை குறித்து அறியாத பெற்றோர் பதற்றத்தில் பல்வேறு இடங்களில் அவரை தேடி அலைந்துள்ளனர். சிறுமி வேலை பார்த்து வரும் நிறுவனம், தோழியின் வீடு, உறவினர்களின் வீடு என தேடல் நடந்துள்ளது. சிறுமி எங்கு தேடியும் காணவில்லை. Love Jihad: சீக்கிய விதவை பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி மதம்மாற்ற முயற்சி.. “லவ் ஜிகாத் குற்றம்” காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!
இதனையடுத்து, சிறுமியின் தாயார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறுமியை தீவிரமாக தேடி வைத்தனர். சிறுமி பேசிய நபர்கள் குறித்து அறிய, அவரின் செல்போன் எண் மூலமாக சைபர் கிரைம் அதிகாரிகளின் உதவியோடு விசாரணை நடந்தது.
விசாரணையில், சிறுமி அடிக்கடி பேசிய நபரின் செல்போன் பெங்களூரில் இருப்பது உறுதியாகவே, அங்கு விரைந்த அதிகாரிகள் சிறுமி மற்றும் அவருடன் இருந்த 2 பேரை கைது செய்து மணப்பாறை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் முக்கிய குற்றவாளியான வேலூரை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டார்.

அதாவது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முபாரக் அலி (வயது 32) என்பவர், சிறுமியிடம் மிஸ்ட் கால் அழைப்பு மூலமாக பழகி இருக்கிறார். முதலில் நட்பாக தொடர்ந்த பழக்கம், பின்னாளில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிறுமியிடம் நேரில் சந்திக்க வருகிறேன் என கூறிய முபாரக் அலி, திருமணம் செய்துகொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி தன்னுடன் பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுமியோடு தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில், பெற்றோரிடம் சிறுமியை நான் திருமணம் செய்யப்போகிறேன் என கூறியுள்ளார். முபாரக்கின் பெற்றோர் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். சிறுமியை அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு வரும்படி கண்டித்துள்ளனர். 5G Smartphones: 5G ஸ்மார்ட்போன்கள் வாங்க தடபுடலாக தயாராகும் இந்தியர்கள்; வெளியான அதிரடி ரிப்போர்ட்.. கொண்டாட்டத்தில் செல்போன் கம்பெனிகள்.!
பெற்றோர் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதும் முபாரக் தனது நண்பர்களான வேலூரை சேர்ந்த நியாஸ் (வயது 32), சத்தம் உசேன் (வயது 28) ஆகியோரின் வீட்டிற்கு சிறுமியை அனுப்பியுள்ளார். அங்கு காம கொடூரர்கள் 2 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெங்களூரில் இருந்து மீண்டும் வேலூர் புறப்பட்டு அனைவரும் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து மீண்டும் நியாஸ் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் பலவந்தப்படுத்தி சிறியை பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். இறுதியில் சிறுமியை பெற்றோரிடம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து, பெங்களூருக்கு அழைத்து சென்று அங்கிருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்க முற்பட்டபோது அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் மீது காவல் துறையினர் கடத்தல், பாலியல் பலாத்காரம், போக்ஸோ உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் விராலிமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on May 07, 2023 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

