வானிலை: 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!
Tamilnadu Rains File Pic (Photo Credit : Youtube)

நவம்பர் 12, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Nov 12, 2025 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).