Salem Rowdy Killed: நள்ளிரவில் நடுரோட்டில் ரௌடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை.. காரில் பின்தொடர்ந்து நடந்த பயங்கரம்.!

கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் பொருட்டு, கத்தி எடுத்த ரௌடியை 6 பேர் கும்பல் வெட்டிச்சாய்த்து சென்ற பயங்கரம் நடந்துள்ளது. உறவினரின் வீட்டிற்கு நண்பரோடு சென்றவரை மர்ம கும்பல் இடைமறித்து போட்டுத்தள்ளியுள்ளது.

Salem Rowdy Killed: நள்ளிரவில் நடுரோட்டில் ரௌடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை.. காரில் பின்தொடர்ந்து நடந்த பயங்கரம்.!
Salem Rowdy Anandhan

பிப்ரவரி 06, காட்டூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூரை (Kattur, Salem) சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மீது கொலை, ஆட்கடத்தல், வழிப்பறி உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.நேற்று இரவு சுமார் 10 மணியளவில் உறவினரின் வீட்டிற்கு பிரபாகரன் தனது நண்பரான ஆனந்தனோடு இருசக்கர (Ride with Two Wheeler) வாகனத்தில் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில், இவர்கள் காட்டூர் வழியே சென்றபோது, இவர்களை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பலமானது இருசக்கர வாகனத்தை இடைமறித்து, ஆனந்தனை தலை (Anandhan Killed by 6 Man Team) உட்பட பல பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. Child Pornography: சிறார் ஆபாச படங்கள் விவகாரத்தில் அதிரடி காண்பித்த ஜெர்மனி.. 3 டார்க் வெப் தளங்களுக்கு அதிரடி தடை..!

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து போன ஆனந்தன், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு (Salem Government Hospital) அனுப்பி வைத்தனர்.

ஆனந்தன் ரௌடியாக (Rowdy) உள்ளூரில் வலம்வந்த நிலையில், அவர் யாரால்? எதற்காக? கொலை செய்யப்பட்டார் என்ற விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 06, 2023 10:40 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Feb 06, 2023 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).