Salem Crime News: மனைவியை அபகரித்து சென்ற நண்பனை குத்தி கொலை செய்த பயங்கரம்; சேலத்தில் அதிரவைக்கும் சம்பவம்.!

நல்ல நண்பன் என நம்பி வீட்டில் அனுமதித்தற்கு மனைவியை கவர்ந்து சென்ற காரணத்தால், துரோகத்தின் விளைவை நண்பன் எதிர்கொண்டு மரணத்தை தழுவிய சோகம் நடந்துள்ளது.

Crime File Picture (Photo Credit: PIxabay)

ஜூன் 14, சேலம் (Salem Crime News): சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர், வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகன். இவரின் நண்பர் மணிகண்டன். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால், பாலமுருகனின் வீட்டிற்கு மணிகண்டன் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். இந்நிலையில், பாலமுருகனின் மனைவி கீர்த்திகாவோடு மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலை ஏற்படுத்தவே, ஜோடியாக பலநேரம் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

ஒரு சமயத்தில் கிருத்திகா தனது குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு மணிகண்டனோடு சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் 7-ம் தேதி பாலமுருகன் தனது உறவினர்களுடன் மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலன் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து பாலமுருகன் - மணிகண்டன் இடையே வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், குற்றவாளியான பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement