ஜனவரி 20, வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி (Vazhapadi, Salem), வேலூர் மாத கோவில் தெருவில் வசித்து வருபவர் அரவிந்த். இவர் அவசர ஊர்தி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் - பெண்மணி ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிச்சியிக்கப்பட்ட பெண்மணி லவ் டுடே (Love Today) திரைப்பட பாணியில், தனது எதிர்கால வாழ்க்கையை அர்பணிக்கவுள்ள கணவரின் செல்போனை கைமாறாக வாங்கி இருக்கிறார்.
அந்த செல்போனை ஆய்வு செய்த பெண்ணுக்கு பேரதிர்ச்சியாக 15 வயது சிறுமி ஒருவரின் (Minor Girl Naked Video) அரை நிர்வாண வீடியோ இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். Srimathi Death Case Update: ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு; சி.பி.சி.ஐ.டி-யிடம் கொடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்.!
இதனையடுத்து, செல்போனை வாங்கி சோதனை செய்த அதிகாரிகள், அரவிந்தனை நேரில் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, அரவிந்தன் (Arvind Cheated Minor Girl) தனது தெருவில் வசித்து வரும் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அரைநிர்வாண வீடியோ எடுத்து வைத்தது உறுதியானது.
இந்த தகவலை சிறுமியின் பெற்றோருக்கு தெரியப்படுத்திய காவல் துறையினர், புகாரை வாங்கி போக்ஸோ (Pocso Act) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர். அரவிந்தனிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
உத்தமனாக இல்லாதவர் உத்தமனை போல நடிக்க முயற்சித்து வெளியான குட்டு, வயது ஆர்வக்கோளாறில் அறிந்தும் அறியாமலும் தவறுகள் செய்யும் ஒவ்வொரு இளைஞருக்கும் பாடம் என்பது குறிப்பிடத்தக்கது.