Thanjavur Accident: ஸ்டியரிங் லாக் ஆனதால் சோகம்; சாலையில் நொடியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரல் காட்சிகள்.!
செம்மண் பாரம் ஏற்றிவந்த கனரக லாரியின் ஸ்டியரிங் திடீரென லாக் ஆனதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
ஆகஸ்ட் 17, வல்லம் (Thanjavur News): தஞ்சாவூர் (Tanjore) மாவட்டத்ததில் உள்ள வல்லம் (Vallam) பகுதியில் இருந்து, செம்மண் பாரம் ஏற்றுக்கொண்ட லாரி ஒன்று பயணம் செய்தது. இந்த லாரி கரம்பயம் கிராமம் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பாய்ந்தது. பின் கோவில் வளைவு பகுதியில் நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், சாலையோரம் இருந்த முதியவர் படுகாயம் அடைந்தார். Tirunelveli Shocker: கோவில் திருவிழாவில் நடந்த தகராறு; சகோதரர்கள் இருவர் குத்திக்கொலை.. நெல்லையில் பதற்றம்.!
முதியவர் காயம்:
அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லம் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர். அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செம்மண் பாரம் ஏற்றி வந்த லாரியின் ஸ்டியரிங் லாக் (Steering Lock) ஆனதால் விபத்து நடந்தது தெரியவந்தது. நல்வாய்ப்பாக முதியவர் காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனமும் சாலையோரம் திரும்பியவாறு திடீரென நின்றதால் பெரும் துயரம் தவிர்க்கப்பட்டது.
வீடியோ நன்றி: தினமணி
#Dinamani | பட்டுக்கோட்டை அருகே லாரி மோதியதில் உயிர் தப்பிய முதியவர்
Watch here:https://t.co/yKIWN9d26i#thanjavur #accident #cctvfotage pic.twitter.com/ZeuNWRM03o
— தினமணி () August 16, 2024
(The above story first appeared on LatestLY on Aug 17, 2024 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

