Gang Rape: 4 பேர் கும்பலால் அக்கா-தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்: விருதுநகரில் அதிரவைக்கும் பயங்கரம்..!

உறவினர் விபத்தில் சிக்கியதாக சொல்லி, இளம்பெண்களை இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gang Rape: 4 பேர் கும்பலால் அக்கா-தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்: விருதுநகரில் அதிரவைக்கும் பயங்கரம்..!
Rape | Representative image (Photo Credit: ANI)

மார்ச் 20, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், அருப்புக்கோட்டை நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்ததாவது, “நான் எனது தங்கை இல்லத்திற்கு சென்ற போது, அங்கு ராஜ்குமார் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. அவர் எங்களிடன் வந்து உங்கள் மாமா விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார் எனக் கூறி, எங்களை அவரின் மோட்டார் வாகனத்தில் அழைத்துச் சென்றார். மேலும், அவர் திடீரென வாழ்வாங்கி பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றார். ஏற்கனவே 4 பேர் உள்ளே இருந்தனர். அவர்கள் ராஜ்குமாரை அடித்து தாக்கினர். அவர்கள் 4 பேரும் எங்களை மிரட்டி வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்” என அதில் கூறியுள்ளார். Sexual Harassment: பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது பெண் – போக்சோவில் கைது..!

இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ராஜ்குமார் என்பவர் அந்த 4 பேரின் கூட்டாளியாக இருந்துள்ளார். மேலும், ராஜ்குமாரை அவர்கள் அடித்து தாக்குவதுபோல் நடித்து, இவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜ்குமார், பாலு, சுந்தரமகாலிங்கம், கனி, மற்றொரு ராஜ்குமார் ஆகிய 5 பேரின் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on Mar 20, 2024 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).