Minister Udhayanidhi Stalin Pays Tribute To Immanuel Sekaran: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Minister Udhayanidhi Stalin Pays Tribute To Immanuel Sekaran: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!
Udhayanidhi Stalin Pays Tribute To Immanuel Sekaran (Photo Credit: @Udhaystalin X | @udhaykups X)

செப்டம்பர் 11, பரமக்குடி (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் (Immanuel Sekaran) 67-வது நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். College Girl Gang Rape: கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்; காதலன் போக்சோவில் கைது..!

இந்நிலையில், தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை (Memorial Day) முன்னிட்டு, வருடந்தோறும் குருபூஜை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழக அரசும் அவர் மறைந்த செப்டம்பர் 11-ஆம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகின்றது. அதன்படி, இமானுவேல் சேகரன் நினைவு தின குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளையொட்டி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Minister Udhayanidhi Stalin) மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை:

(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).