தரையில் பச்சிளம் குழந்தைகள்.. திமுக அரசு வெட்கப்பட வேண்டும் - நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு.!
பாஜக மாநில தலைவர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் காணொளியை பதிவிட்டு திமுக அரசு முறையான வசதிகளை செய்ய தவறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜூலை 16, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு தொட்டில் கூட இல்லாமல் தரையில் படுக்க வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் முறையான வசதிகளை செய்ய தவறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்ததாக பதிவு :
இந்த சம்பவம் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது. பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும்! என தெரிவித்துள்ளார்.