Teacher Stabbed To Death: வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை.. வாலிபர் வெறிச்செயல்..!

தஞ்சாவூரில் ஆசிரியை வகுப்பறையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teacher Stabbed To Death: வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை.. வாலிபர் வெறிச்செயல்..!
Crime Scene with Knife File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 20, கும்பகோணம் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம் சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (வயது 26). இவர், மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சின்னமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (வயது 30). இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். வானிலை: 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!

இதனைத்தொடர்ந்து, மதன் குடும்பத்தினர் ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், ரமணி தனக்கு மதனைப் பிடிக்கவில்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று (நவம்பர் 20) காலை ரமணி பணியாற்றி வந்த பள்ளிக்கு சென்று, அங்கு வகுப்பறைக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ரமணியின் கழுத்தில் கத்தியால் சரமாரியாகக் (Murder) குத்தியுள்ளார். இதனைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறியடித்து வகுப்பறையை விட்டு வெளியில் ஓடி வருவதையறிந்த மற்ற ஆசிரியர்கள், அந்த வகுப்பறைக்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ரமணி கிடந்துள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சேதுபாவசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய மதனை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 20, 2024 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).