Tenkasi Shocking Murder : "என்னோடு வா".. அழைப்பு விடுத்த கள்ளக்காதலனை குடும்பத்தோடு சேர்ந்து தீர்த்துகட்டிய கள்ளக்காதலி..!!

கள்ளக்காதலன் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியதால் பெண்மணி ஒருவர் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து அவரை கொலை செய்து பக்கத்து வீட்டுக்காரரின் கழிவு நீர் தொட்டியில் வீசியது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Tenkasi Shocking Murder :
Tenkasi Murder Visuals (Source)

ஜீன் 9, தென்காசி (Tenkasi Crime News): தென்காசி மாவட்டத்தில் உள்ள இலத்தூரில் சமீபத்தில் லட்சுமணன் என்பவர் தனது வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளார். அப்போது மனித எலும்புக்கூடு ஒன்றினை கண்டு அதிர்ந்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அதை கைப்பற்றி தடவியல் சோதனை நடத்திய போது, அதே பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன் காணாமல் போன மது என்கிற மாடசாமி என்பவரின் எலும்புக்கூடு என்பது தெரியவந்துள்ளது. Eurozone Slips Into Recession: வரலாற்றில் இல்லாத அளவு சரிவை சந்திக்க தொடங்கிய யூரோ.. சர்வதேச அளவில் அதிர்ச்சியை தந்த தகவல்கள்.!

இதன்பின் விசாரணையில், இறந்த மதுவுக்கும், லக்ஷ்மணனின் வீட்டின் முன்பு வாடகைக்கு குடியிருந்த பிரியா என்ற பேச்சியம்மாளுக்கும் கள்ளதொடர்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் பிரியாவிடம் காவல்துறையினரும் விசாரணை நடத்தவே, அவர் மதுவுக்கும், தனக்கும் திருமணம் கடந்த தொடர்பு இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் குடும்பத்தை விட்டு தன்னுடன் வருமாறு மது கட்டாயப்படுத்தியதால் அவரை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரியா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மாரியம்மாள், கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது தம்பி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jun 09, 2023 10:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).