Thanjavur Shocker: மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் சோகம்; நண்பரை கொலை செய்த பாவிகள்.! தஞ்சாவூரில் துயரம்.!
கல்லூரி வளாகத்திற்கு பின்னால் இருக்கும் வனப்பகுதியில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், விசாரணில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.
ஏப்ரல் 26, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்திற்கு பின்புறம் இருக்கும் வனப்பகுதியில் இருந்து சம்பவத்தன்று ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கடந்த 16ம் தேதி முதல் தனது கணவரை காணவில்லை என தனியார் ஓட்டலில் கிரில் மாஸ்டராக பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த விஷயம் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். Monkey Drinks RO Water: அடிக்கிற வெயிலுக்கு ஆர்ஓ வாட்டர் குடித்தால் தான் தாகம் அடங்கும்; வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் குடித்த குரங்கு.!
நண்பர்கள் தந்த அதிர்ச்சி வாக்குமூலம்: கடந்த 19ம் தேதி வனப்பகுதியில் இருந்து பிரகாஷின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேரில் வந்த பிரகாஷின் மனைவி தனது கணவரின் உடலை உறுதி செய்தார். இதனையடுத்து, பிரகாஷ் இங்கு வந்தது எப்படி? என்ற கோணத்தில் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், சம்பவத்தன்று பிரகாஷ் ஆட்டோ ஓட்டுநர் தமிழ்நீதி என்பவரால் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவர்களின் வாகனத்தை இவர்களின் நண்பர் பிரவீன் பின்தொடர்ந்து சென்றதும் உறுதியானது. இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
குடிப்பழக்கம் கொலையில் முடிந்தது: விசாரணையில், குடிப்பதில் நடந்த பிரச்சனையில் பிரகாஷை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், மதுபானம் அருந்தும்போது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இறுதியில் உண்மையை அறிந்த காவல் துறையினர், பிரவீன் மற்றும் தமிழ்நீதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Apr 26, 2024 08:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

