Minor Girl Marriage: திருமணமான 16 வயது சிறுமி காதலனுடன் தப்பி ஓட்டம்..! இருவர் கைது..!
மயிலாடுதுறையில் திருமணமான சிறுமி தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 11, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி நாட்டார் தெருவை சேர்ந்த தவசிமுத்து என்பவரது மகன் உதயகுமார் (வயது 22). இவர் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகன் ரஞ்சித்துக்கு (வயது 24), கடந்த மாதம் சிறுமியை மணமுடித்தனர். Blinken Heads To Middle East: கொடூரமாகும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்.. போரைக் கட்டுப்படுத்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் சுற்றுப்பயணம்..!
இதனையடுத்து, சிறுமி தனது காதலன் உதயகுமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தன்னை கூட்டிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதன்காரணமாக, கடந்த 9-ஆம் தேதி அன்று உதயகுமார் தனது இரு சக்கர வாகனத்தில் அங்கு சென்று, வீட்டில் இருந்த சிறுமியை கூட்டிக் கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறையினர், குழந்தைகள் திருமண தடை சட்டம் (Child Marriage Prohibition Act) மற்றும் போக்சோ சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த ரஞ்சித், சிறுமியின் காதலன் உதயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், ரஞ்சித்தின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

