Man Dies By Suicide After killing Girlfriend: காதலியை கொன்றுவிட்டு காதலன் விவரீத முடிவு.. குடும்பத்தினர் சோகம்..!

சிவகங்கையில் வாலிபர் ஒருவர் தனது காதலியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Man Dies By Suicide After killing Girlfriend: காதலியை கொன்றுவிட்டு காதலன் விவரீத முடிவு.. குடும்பத்தினர் சோகம்..!
Murder (Photo Credit: Pixabay)

அக்டோபர் 11, மதகுபட்டி (Sivaganga News): சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியைச் சேர்ந்த மலையாண்டி என்பவரது மகள் மோனிஷா (வயது 20), அங்குள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்த உறவினர் ராமகிருஷ்ணன் என்பவரது மகன் ஆகாஷும் (வயது 21) காதலித்து வந்துள்ளனர். இவர், கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். வானிலை: இன்று நாளையும் கனமழை., அக்.12 முதல் மிககனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 10) காலை மதகுபட்டி வந்த ஆகாஷ், மோனிஷா வீட்டுக்குச் சென்று, மோனிஷாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது தந்தை மலையாண்டியிடம் கேட்டுள்ளார். இதற்கு மலையாண்டி மறுப்பு தெரிவித்ததால், அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர், மலையாண்டி வெளியே சென்ற பிறகு, மீண்டும் அவரது வீட்டுக்குச் சென்ற ஆகாஷ், தன்னுடன் வருமாறு மோனிஷாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்த நிலையில், அருகில் இருந்த பாட்டிலை உடைத்து அவரது கழுத்தில் (Murder) குத்தியுள்ளார்.

இதில் மோனிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆகாஷ், உடனே தானும் அதே பாட்டிலால் வயிற்றில் குத்தி தற்கொலை (Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதகுபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 11, 2024 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).