Nurse Girl Raped Her Boy Friend: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்; காதலன் வீடியோ எடுத்து மிரட்டல்..!

விருதுநகரில் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, அவருடைய காதலன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nurse Girl Raped Her Boy Friend: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்; காதலன் வீடியோ எடுத்து மிரட்டல்..!
Rape File pic (Photo Credit: Pixabay)

மே 14, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர், டிப்ளமோ நர்சிங் (Diploma Nursing) படித்து முடித்துவிட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்த இளம்பெண் சேத்தூரில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கிருந்த போது, அந்த பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வந்த மலைக்கனி (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்த இளம்பெண், தனது அக்காள் வீட்டிற்கு மலைக்கனியை வரவழைத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அந்த பெண்ணிடம் குடிக்க கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் மயங்கி கிடந்த அவரை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். பின்னர், மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, அவருடைய ஆடைகள் கலைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். Earthquake Near Guatemala-Mexico Border: அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம்.. சாலைகளுக்கு ஓடி வந்த மக்கள்..!

இதனையடுத்து, மலைக்கனி நான்தான் உன்னை திருமணம் செய்துகொள்ள போகிறேன். இதனால் தான் நான் உன்னுடன் உறவு கொண்டுள்ளேன் எனக்கூறி அந்த வீடியோவை அவரிடன் காட்டியுள்ளார். இதனைப் பார்த்த அவர், வீடியோவை அழித்து விடுங்கள் எனக் கூறியுள்ளார். பின்னர், சில நாட்களுக்குப் பிறகு தன்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என நர்ஸ் கேட்டபோது, அதற்கு அவர் அலட்சியப்படுத்தியுள்ளார். மேலும், அந்த ஆபாச வீடியோவை நர்ஸின் அத்தை மகனுக்கும் அனுப்பி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த நர்ஸ் குடும்பத்தினர், இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள கெஞ்சி கேட்டுள்ளனர். இதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின்பேரில், மலைக்கனி மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on May 14, 2024 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).