Minor Girl Sexual Harassment By Car Driver: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தலைமறைவாகியுள்ள ஓட்டுநருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!
சென்னையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாகியுள்ள அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏப்ரல் 29, அண்ணாநகர் (Chennai News): சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவர், தனது 17 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். தற்போது, கோடை விடுமுறை என்பதால் தனது மகளை அவர் வேலைக்கு செல்லும் இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். Google Pixel 8a Smart Phone Expected Features: கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட் போன் பற்றிய வீடியோ காட்சிகள் வெளியீடு..! சுவாரசியத்தை அதிகரிக்கும் சிறப்பம்சங்கள்..!
இந்நிலையில், சிறுமியின் தாய் வேலை செய்யும் இடத்தில், அங்குள்ள வீட்டின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் அரி (வயது 41). இவர், இந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு (Sexual Harassment) அளித்து வந்துள்ளார். இதுபற்றி சிறுமி தனது தாயிடம் அழுதபடி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கார் ஓட்டுநரை கண்டித்து எச்சரித்துள்ளார். இதனையடுத்து, அவர் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததை அடுத்து, சிறுமியின் தாயார் நேற்று மாலை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்.
புகார் அளிக்கப்பட்டதை அறிந்த கார் ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டார். புகாரின்பேரில், காவல்துறையினர் சம்மந்தபட்ட கார் ஓட்டுநர் அரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on Apr 29, 2024 06:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

