வானிலை: இன்று மிககனமழை எச்சரிக்கை.. தமிழக மக்களே குடை எடுத்துக்கோங்க.. இன்றைய வானிலை, நாளைய வானிலை இதோ.!
தலைநகர் சென்னையில் இன்று இடி-மின்னலுடன் மழைக்கான வாய்ப்பும், இன்று நெல்லை மாவட்டத்தில் மிககனமழை வாய்ப்பு இருப்பதாகவும் அவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 19, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில், (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிளிலும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி ஊத்து பகுதியில் 15 செமீ மழையும், நாலுமுக்கு பகுதியில் 14 செமீ மழையும், காக்காச்சி மற்றும் மயிலாடுதுறை தரங்கம்பாடி பகுதியில் 12 செமீ மழையும், மயிலாடுதுறை செம்பனார்கோவில், திருநெல்வேலி மாஞ்சோலை, மயிலாடுதுறை பகுதிகளில் 11 செமீ மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது. நாகப்பட்டினம், திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர், திருவள்ளூர், தர்மபுரி, திண்டுக்கல், அரியலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக கன்னியாகுமரியில் 30.6 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக பரமத்தி வேலூரில் 17.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
அடுத்த ஏழு இினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 19-01-2025 இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Rahul Tiky Wife: யூடியூபர் ராகுல் டிக்கி மரணம்; மனைவி கர்ப்பம்? பரபரப்பு தகவல்.. மாமியாரின் அதிர்ச்சி செயல்.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
20-01-2025 நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் யிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். 21-01-2025 முதல் 23-01-2025 வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் யிதமான மழை பெய்யக்கூடும். 24-01-2025 மற்றும் 25-01-2025 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecas):
இன்று (19-01-2025) இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (20-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23” செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
19-01-2025 மற்றும் 20-01-2025 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 48 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 19-01-2025 இன்று தென் மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on Jan 19, 2025 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

