Child Abuse: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... 20 ஆண்டுகள் சிறை தண்டணை..!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தையல் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்துள்ளது.

Child Abuse: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... 20 ஆண்டுகள் சிறை தண்டணை..!
Sexual Abuse | Court Judgement, Both File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 12, ஈரோடு (Erode): ஈரோடு மாவட்டம், பெரியாா் நகா் பகுதி கோவிந்தராஜ் நகரைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் (வயது 49). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவா் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, அப்பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் 2018ல் சிறுமியின் தாய் புகாா் அளித்தாா். அதன் பேரில் சாந்தகுமாரை காவல் துறையினர் கைது செய்தனா். Viral Video: கண்ணீருடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பெண் ஊழியர்... வைரலாகும் வீடியோ..!

இந்நிலையில், இவ்வழக்கானது ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆா் மாலதி, குற்றஞ்சாட்டப்பட்ட தையல் தொழிலாளி சாந்தகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.

(The above story first appeared on LatestLY on Jan 12, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).