Hanging Suicide File Pic (Photo Credit: Pixabay)

மே 29, திருப்பத்தூர் (Tirupathur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியை அடுத்த மகாத்மா காந்தி தெருவை சேர்ந்த பழனி (வயது 32) என்பவர், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், ஏழரைபட்டி பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. Love Couple Suicide: கழுத்தை நெரித்த கடன் தொல்லையால் காதலன் தற்கொலை; காதலியும் உயிரை மாய்த்ததால் கண்ணீரில் பெற்றோர்.!

இந்நிலையில், காயத்ரி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு 7 மாதத்திலேயே குறை பிரசவத்தில் (Premature Delivery) பெண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் அந்த குழந்தை உயிரிழந்தது. இதன்காரணமாக, பழனி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சரியான சாப்பாடு, உறக்கம் இல்லாமல் மனமுடைந்து காணப்பட்டார். இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்டறம்பள்ளி காவல்துறையினர், பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.