Young girl Poured Boiling Milk On The Boy: வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய இளம்பெண்; கிண்டல் செய்ததால் ஆத்திரம்..!

சென்னையில் டீ கடையில் இளம்பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் மீது, கொதித்துக் கொண்டிருக்கும் பாலை எடுத்து ஊற்றியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Young girl Poured Boiling Milk On The Boy: வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய இளம்பெண்; கிண்டல் செய்ததால் ஆத்திரம்..!
Feeling Sad (Photo Credit: Pixabay)

மே 31, சென்னை (Chennai News): சென்னை, திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் பிரபலமான டீ கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு வாலிபர் ஒருவர் டீ அருந்த சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் அந்த கடையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அந்த இளம்பெண்ணை வாலிபர் கிண்டல் செய்துள்ளார். Bihar Heatwave Death: பீகாரை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; தேர்தல் பணியாளர்கள் உட்பட 19 பேர் பரிதாப பலி.!

இந்நிலையில், ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், டீ கடையில் பாய்லரில் கொதித்து கொண்டிருந்த பாலை (Boiling Milk) எடுத்து, அந்த வாலிபர் மீது ஊற்றினார். இதில், அவருக்கு வயிறு மற்றும் உடலின் பல பகுதிகளில் வெந்துபோனது. இதனால், வாலிபர் வலியால் கத்தி கதறியுள்ளார். வலியில் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து, அண்ணா சதுக்கம் காவல்துறையினர் இதுகுறித்து வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது உறவுக்கார பெண் தான் அவர், அவருக்கு இன்னும் 2 வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதனால், நான் உரிமையோடு கிண்டல் செய்தேன். அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று, வாலிபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 31, 2024 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).