Wife Kills Husband: குடிபோதையில் தகராறு செய்த கணவர் கத்தியால் குத்திக்கொலை.. மனைவி கைது..!
திண்டுக்கலில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை, மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 21, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டம், முருகபவனம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த தம்பதி கண்ணன் (வயது 45)-மோகனாதேவி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கண்ணன், திண்டுக்கல்-பழனி (Dindigul To Palani) சாலையில் அமைந்துள்ள லாரி ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். Fact Check: குரங்கு கடியால் குரங்குபோல அட்ராசிட்டி செய்த நபர்.. பரவி வரும் வதந்தி.. உண்மை என்ன?!
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 20) மாலை வேலையை முடிந்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டிலிருந்த அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி மோகனா தேவியை குத்த முயன்றார். கத்தியை பிடுங்கிய மோகனாதேவி, ஆத்திரத்தில் கணவனை பலமாக (Murder) குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகனா தேவியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

