IMD Weather Update: தமிழகத்திற்கு மழை வாய்ப்பு... இந்திய வானிலை மையம் அறிக்கை..!
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 28, சென்னை (Chennai): கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடங்களிலும், உள் மாவட்டங்களில் ரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் (India Meteorological Department) அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், " நாளை டிசம்பர் 29ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஓரி இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Lee Sun-kyun death: லீ சன் கியூன் மர்ம மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி..!
மேலும், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சுருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.