டிசம்பர் 28, தென் கொரியா (South Korea): தென்கொரிய இயக்குநர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் தான், ‘பாரசைட்’. இந்தப் படம் ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. இந்த படத்தில் தென்கொரிய நடிகர் லீ சுன் க்யூன் (Lee Sun-kyun) முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மேலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், 48 வயதான லீ, நேற்று ஒரு பார்க்கில் தனது காரின் உள்ளே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். E Cigarette Caution: இ-சிகிரெட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவ்வுளவா?.. அலட்சியமாக கூட தப்பு பண்ணிடாதீங்க.!
லீ சன் கியூன் மர்ம மரணம்: லீ சன் கியூன் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் அந்தச் சமயத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதன்மூலம் என்மீது நம்பிக்கைவைத்த மக்களையும், என் குடும்பத்தையும் ஏமாற்றியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் அவர் காருக்குள் சடலமாக கிடந்ததால், தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.