Lawyer Cheates Young Woman: விவாகரத்து பெறுவதற்காக வழக்கறிஞரை சந்தித்த இளம்பெண்; அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..!

திருப்பத்தூரில் விவாகரத்து பெறவேண்டி வழக்கறிஞரை சந்தித்த இளம்பெண்ணை, வழக்கறிஞர் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lawyer Cheates Young Woman: விவாகரத்து பெறுவதற்காக வழக்கறிஞரை சந்தித்த இளம்பெண்; அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..!
Lawyer Cheated Young Woman (Photo Credit: Facebook)

ஜூலை 22, புதுபூங்குளம் (Tirupathur News): திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதி ஜெகதீசன்-ஜெயந்தி. ஜெகதீசன் வழக்கறிஞராக (Lawyer) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தாயலூர் கிராமத்தை சேர்ந்த உஷாகுமாரி என்பவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து (Divorce) பெறவேண்டி வழக்கறிஞர் ஜெகதீசனை சந்தித்துள்ளார். அப்போது, ஜெகதீசன் உஷாகுமாரியின் முழு விவரங்களை பற்றியும் தெரிந்து கொண்டுள்ளார். அதில், அவருடைய சொத்து விவரங்களை பற்றியும் கேட்டுக் கொண்டுள்ளார். ITT Vs SS Highlights: சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அபார வெற்றி; முகமது அலி அசத்தல் பந்துவீச்சு..!

இதனால், உஷாகுமாரிக்கு காதல் வலைவீசி, தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறி, அந்த பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், ஜெகதீசன் உள்ளாட்சி தேர்தலில் நிற்பதாக கூறி, அவரிடம் ரூ. 10 லட்சம் மற்றும் 1.25 ஏக்கரில் 30 சென்ட் இடத்தை விற்றுதருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்த நிலையில், 50 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்து, அதில் ரூ. 15 லட்சம் பணம் கிடைத்ததாக உஷாகுமாரியிடம் தெரிவித்துள்ளார்.

இதனை பற்றி தெரிந்துகொண்ட உஷாகுமாரி, அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார். மேலும், அவரது மனைவியின் புகைப்படத்தையும் எடுத்து காண்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உஷாகுமாரி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், வழக்கறிஞர் ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 06:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).