Madras High Court Order: சுதந்திர தினத்தில் தேசியக்கொடியேற்ற தடுப்பவர்கள் மீது குண்டாஸ்.. சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!
தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 12, சென்னை (Chennai): நாட்டின் 78-வது சுதந்திர தினம் (Independence Day) ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படஉள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் காலை வழக்குகளை விசாரிக்கத் துவங்கும் முன், சுதந்திர தினத்தை ஒட்டி குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அமர்வில் பெண் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன்வைத்தார். TN Weather Update: ஆரஞ்சு எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கூறுகையில், "தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். தேசிய கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. மேலும் தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம்" என்று கூறினார்.
(The above story first appeared on LatestLY on Aug 12, 2024 04:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

