வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன..? வெளியான முக்கிய தகவல்..!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன..? வெளியான முக்கிய தகவல்..!
Tomorrow Weather (Photo Credit: LatestLY)

மார்ச் 26, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தில்‌ கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கூடல் அணை பகுதியில் அதிகபட்சமாக 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தி மற்றும் மதுரை 37.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாகப் பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 டிகிரி செல்சியல் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ சமவெளி பகுதிகளில்‌ 35-38 டிகிரி செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-35 டிகிரி செல்சியஸ்‌ பதிவாகியுள்ளது. வானிலை: 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இன்று (26-03-2025) மற்றும் நாளை (27-03-2025) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

28-03-2025 மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 29-03-2025 முதல் 01-04-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

இன்று (26-03-2025) முதல் 30-03-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

28-03-2025 முதல் 30-03-2025 அதிகபட்ச வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (26-03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (27-03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

(The above story first appeared on LatestLY on Mar 26, 2025 02:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).