வானிலை: ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை: ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
Summer Weather Report (Photo Credit: Team LatestLY)

மார்ச் 19, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ தென்காசி பகுதியில் அதிகபட்சமாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 38.0 டிகிரி செல்சியஸ்‌ பதிவாகியுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 டிகிரி செல்சியல் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ சமவெளி பகுதிகளில்‌ 35-38 டிகிரி செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-35 டிகிரி செல்சியஸ்‌ பதிவாகியுள்ளது. வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை எப்படி? வானிலை நிலவரம் இதோ..!

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இன்று (19-03-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20-03-2025 மற்றும் 21-03-2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22-03-2025 மற்றும் 23-03-2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-03-2025 மற்றும் 25-03-2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

19-03-2025 மற்றும் 20-03-2025 அதிகபட்ச வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (19-03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (20-03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

(The above story first appeared on LatestLY on Mar 19, 2025 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).