Woman Police Attack: பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு; மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல்..!

காஞ்சிபுரத்தில் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பெண் காவலரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Police Attack: பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு; மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல்..!
Crime File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 17, காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகே பணி முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காவலரை (Woman Police) மர்மநபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். Grandfather Killed Child Baby: ஒரு மாத குழந்தையை கொன்ற தாத்தா; மூட நம்பிக்கையால் நேர்ந்த சோகம்..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

பெண் காவலரான டில்லிராணி, விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை மர்ம நபர்கள் சிலர், கையில் பல இடங்களில் சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பெண் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, அரிவாளால் தாக்கப்பட்ட பெண் காவலர் டில்லிராணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, மேற்கொண்ட விசாரணையில், டில்லிராணிக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். டில்லிராணி தாக்கப்பட்டதற்கு அவரது கணவர்தான் காரணமாக இருக்கக்கூடும் என்று நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

(The above story first appeared on LatestLY on Jun 17, 2024 06:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).