Coimbatore Shocker: குழந்தையை சேலையில் ஒருசேர முடிந்து தாய் தற்கொலை; கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சோகம்..!
கோயம்புத்தூரில் தனது குழந்தையை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 05, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருகே உள்ள பெள்ளாதி கிராமத்தை சேர்ந்த தம்பதி சந்தோஷ் (வயது 31)-கலாமணி (வயது 28). இத்தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் அஸ்விக்கா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், நேற்று காலை சந்தோஷ் தோட்டத்திற்கு சென்றுவிட்டார். அப்போது, கலாமணி தனது மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால், அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவர்களை தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இதுகுறித்து காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். Air Pollution Deaths: சென்னை, மும்பை நகரங்களில் காற்று மாசு மரணங்கள் அதிகரிப்பு; ஆண்டுக்கு 33 ஆயிரம் பேர் பலி.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
இதனிடையே, இவர்கள் மீண்டும் தேடி வந்த நிலையில், மதியம் 2 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கிணற்றின் (Well) ஓரத்தில் கலாமணியின் செருப்பு கிடந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்து கிணற்றை எட்டிப் பார்த்தபோது, அவர்கள் இருவரும் பிணமாக கிடைப்பதை கண்டு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காரமடை காவல்துறையினர் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் அவர்களின் உடல்களை மீட்டனர். அப்போது, தாய் கலாமணி, மகள் அஸ்விக்காவை தனது மார்போடு துணியால் சேர்த்து கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

